எதிரியை வீழ்த்த முதலில் அவனது சித்தாந்தத்தை வீழ்த்து!

Wednesday, June 24, 2009

தமிழ் மாதங்களின் பிறப்பு -பெயர் வைப்பு முறை

கேள்வி ; தந்தை பெரியார் வலியுறுத்திய எழுத்து சீர்திருத்தத்தை நடைமுறைப் படுத்தா த தன்மையினால் தமிழின் வளர்ச்சி எத்தன்மையில் உள்ளதென கருதுகிறீர்கள்?
பதில்: மண்ணில் முளைவிடா விதைபோல் உள்ளது.

கேள்வி செம்மொழி எனும் தகுதியினை பெற்றிருப்பது -நண்ணில அரசு இசைவாணை வழங்கி யிருப்பது மண்ணில் முளைவிடா விதை என்று கருதுகிறீர்களா?
பதில் : பெயர் அளவில் ஏற்றுக் கொள்ளப் பட்டாலும் செய ல் அளவில் பயன் - பலன் எதுவுமில்லை என்பதை ஆராயின் உண்மை புலப்படும்.

கேள்வி செம்மொழி மையத்துக்கு அமர்த்தம் செய்யப்பட்டுள்ள ஐம்பெருங்குழு - எண்பேராயத்தின் பேராளர்கள் பற்றி தங்கள் கருத்து என்ன?
பதில் : சரக்கு சிறப்பாக இருக்க வேண்டும்; பயன் உண்டு. சரக்கு சிறப்பாக இல்லாது சரக்கு வழங்குவோர் மட்டும் எடுப்பாக இருந்து பயன் இல்லை.

கேள்வி : இந்திய நாட்டின் ஆட்சி மொழி தகுதி எம்மொழிக்கு இருக்கிறது?
பதில் :விருப்பு -வெறுப்புக்கு இடன் இல்லாது மொழிநூல் வல்லார்களின் கருத்தை ஆராயின் தமிழ் மொழி மட்டுமே அத்தகுதிக்கு உரியதாகும்.

கேள்வி : பிற மொழிகள் பேசுவோர் தமிழ் மொழியினை ஆட்சி மொழியாக ஒப்புதல் அளிப்பார்களா?
பதில் : பலமொழி பேசும் மக்களிடையே ஒரு மொழியினை ஆட்சி மொழி ஆக்குதற்கு ஒரு வரம்பு இருப்பின் ஆட்சி மொழி தகுதியினை தமிழ் தட்டிப் பறிக்கும்; மேலும் உலக ஆட்சி மொழியாக இலங்க த் தக்க தகுதியும் தமிழுக்கு உண்டு; உலக மொழிகள் பலவற்றிலும் தமிழ்ச் சொற்கள் வழங்குவதுபோல் பிறமொழிச் சொற்கள் உலக மொழிகள் பலவற்றில் வழங்கும் நிலையினைக் காணமுடியாது. மேலும் தாங்கள் கேட்ட கேள்வி க்கு பதிலை அளித்தேனே தவிர தமிழ் மொழிக்கு ஆட்சிமொழி தகுதியினை அளிக்க வேண்டுமென்று வலியுறுத்த வில்லை என்பதை தாங்கள் நினைவிற் கொள்ள வேண்டும். ஆட்சி மொழிக்குரிய தகுதி தமிழைத் தேடிவரும் காலம் ஒரு நாள் மலரும். அந்நாள் எந்நாள் என்பதை காலம் அளிக்க வேண்டிய பதில்.


கேள்வி : நமக்கு ஓர் ஆண்டு என்பது பிரமனுக்கு ஒரு நாள் என விளம்பும் நிலை குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில் : 360 பாகைகளை கொண்ட வான வெளியினை சுற்றி வர சூரியன் எடுத்துக் கொள்ளும் கால அளவு 365.25 நாட்கள்; சந்திரன் எடுத்துக் கொள்ளும் கால அளவு 30 நாட்கள்; செவ்வாய் மண்டலம் எடுத்துக் கொள்ளும் கால அளவு 18 மாதங்கள் ; புதன் மற்றும் சுக்கிர மண்டலங்கள் எடுத்துக் கொள்ளும் கால அளவு சூரியன் எடுத்துக் கொள்ளும் கால அளவாகும். வியாழன் எடுத்துக் கொள்ளும் கால அளவு 12 ஆண்டுகள்; சனி மண்டலம் எடுத்துக் கொள்ளும் கால அளவு 30 ஆண்டுகள்; இராகு, கேது துருவக் கோள்கள் எடுத்துக் கொள்ளும் கால அளவு 18 ஆண்டுகள் ஆகும். ஆனால் , புவி மண்டலம் எடூத்துக் கொள்ளும் கால அளவு 60 நாழிகை-ஒரு நாள்; இதனையே பிரமனுக்கு ஒரு நாள் என விளம்பும் நிலை வாழ்ந்து வருகிறது .


கேள்வி.: பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என வழங்கும் பழமொழி யின் உட்பொருள் என்ன?
பதில்: பழந்தமிழர் கிழமை (வாரம்) ஒன்றுக்கு அறுநாட்களையே தெரிவு செய்து வழங்கி வந்தனர். அந்நெறிமுறையின்படி மாதம் ஒன்றுக்கு ஐந்து கிழமை
கள் இடம் பெறும் ; ஐந்து கிழமைகளை நிரல் படுத்துங்காலை மூன்றாம் கிழமையில் உள்ள புதன் நிறையுவா வரும் நாளில் மட்டுமே வரும். அந்நிறையுவா நாளில் புதனைத் தவிர்த்து பிற கோள்களின் பெயர்கள் வந்திடா அதன் காரணமாகவே பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என விளம்பும் வழக்கம் இருந்து வருகிறது .


கேள்வி : கிழமைக்கு அறு நாட்களை கொள்வதற்கு - கொண்டதற்கு ஆதாரம் என்ன?
பதில்: பன்னிரு இராசி மண்டலங்களில் சூரியர்- சந்திரர் இருவருக்கும் ஒவ்வொரு மண்டலமும் ஏனைய ஐந்து கோள்களுக்கு இரண்டு , இரண்டு மண்டலமாக பகுக்கப் பட்டுள்ள தன்மையே உரிய சான்றாகும்.

கேள்வி : இந்திரன் மனைவியர் இருபத்தேழு பேர் என்பதை பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில் : நாம் வான மண்டலத்தில் காணத் தக்க நிலையில் உள்ள சந்திரனையே ஆணாக உருவகித்து இந்திரன், தேவேந்திரன் என புராண நூல்கள் உரைக்கின்றன; அடுத்தார்போல் வான மண்டலத்தி ல் ஒளிரும் விண் மீன்கள் இருபத்தேழை நங்கையராக பாவித்து -இந்திரன் மனைவியரென கொண்டு கதைகள் பலவற்றை புனைந்துள்ளனர் என்பதே யான் கொண்ட முடிபு.

கேள்வி : புதன் என்னும் சொல் தமிழ் அல்ல என்று சிலர் கூறுவது பற்றி உங்கள் முடிபு என்ன?
பதில் : புதன் தமிழ்ச் சொல்லே ; உலக வழக்கில் லகரம் தகரமாக மருவி வழங்கும் தன்மை உண்டு; இதனை மொழிநூல் வாணர் பாவாணர் அவர்கள் தம்முடைய தமிழ் வரலாறு எனும் நூலில் சுட்டிக் காட்டியுள்ளார்; இதனை அன்னாரின் நெறிப்பட்டோர் என காட்டிக் கொள்ள புதன் என்னும் சொல்லிற்கு மாற்றாக அறிவன் என்னும் சொல்லை எடுத்தாள்வோர் உணர வேண்டும். பாவாணர் அவர்கள் தாம் உரைத் த கருத்துக்கு சான்றாக எடுத்துக்காட்டியமை சலங்கை- சதங்கை என்பதாகும். எனவே புலன் >புதன் ஆக வழங்கிட ஏது உண்டு.

கேள்வி : திரிபுரம், மூவுலகம், மூவெயில், மூவேழ் உலகு என வழங்கும் தொகைச் சொற்கள் சுட்டிக் காட்டும் இடம் யாது?

பதில்: தாங்கள் சுட்டிக்காட்டிய பெயர்ச் சொற்கள் சுட்டிக் காட்டும் இடம் நம் இந்தக(இந்திய) நாட்டையே யாகும். தெற்கு, மேற்கு, வடக்கு என்னும் முப்பகுதிகளும் நீண்ட-நெடிய அரண்களாக பெருமலைத் தொடர்களை பண்டு கொண்டிருந்தன.


கேள்வி : தலை -இடை- கடை யுவா என்னும் தொகைச் சொற்கள் குறிக்கும் பொருள் என்ன?
பதில்: உவா என்றால் மூவைந்து நாட்கள் ஆகும். தலை -இடை கடை ஆகியன நிலைமொழி யாகிடின் முன் பதினைந்து, இடை பதினைந்து, இறுதி பதினைந்தாம் நாள் எனப் பொருள்படும். தலையுவா எனின் வளர்பிறை முதலாம் நாள்; இடையுவா எனின் நிறைமதி(பவுர்ணமி) நாள் ; கடை யுவா எனின் தேய் பிறை இறுதி நாள் (அமாவாசை) ஆகும்.

கேள்வி : தொல்காப்பிய எழுத்ததிகாரத்தில் "சகரக் கிளவியு மவற்றோ டற்றே, அவை அ,ஐ, ஔ எனும் மூன்றலங் கடையே " எனும் நூற்பாவிற்கு மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்கள் அளித்துள்ள அடிக்குறிப்பு பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: சகரக் கிளவியும் அவற்றோ டற்றே, அவை அ எனும் ஒன்றலங் கடையே " என மூல பாடம் இருந்திருத்தல் வேண்டுமென்று சகர அகரம் மொழிக்கு முதலாக வழங்கிய மைக்கு சான்றாக பல சொற்களை காட்டியுள்ளார் . அதே நேரம் 'அவை ' என்னும் சுட்டு மொழி குறிப்பது ஒன்றுக்கு மேற்பட்ட தன்மை யாகும். எனவே, என் மொழிநூல் அறிவுக்கு வழிகாட்டியாக திகழ்ந்த பாவாணர் அவர்களின் கூற்றில் உள்ள உண்மைப் பொருளும் தொல்காப்பியரின் உள்ள்க் கிடக்கை என்ன என்பதையும் ஒரு சேர ஆயுங் காலை புலப்படும் உண்மை பின்வருமாறு ஆகும். " சகரக் கிளவியும் அவற்றோ டற்றே, அவை ஐ, ஔ எனும் இரண்டலங்கடையே " என மூல பாடம் இருந்திருத்தல் வேண்டும். ஏடு எடுத்து எழுதியோரால் அவை என்னும் சொல்லின் கண் ஈற்றில் உள்ள ' வை ' யினை விடுத்து " அவை அ, ஐ , ஔ எனும் மூன்றலங் கடையே " என பிழைபட எழுதிய வழு வழக்கே பின் தொடர்ந்து வழக்கில் நிலைபெற்று வழங்குகிறது என்று கூறலாம்.

கேள்வி : உதயாதி நாழிகைக்கு சூரிய உதயத்தை முதன்மையாக கொள்வது சரியா? தவறா?

பதில் : சூரிய உதயத்தை முதன்மையாக கொள்வது பழந்தமிழரின் கோட்பாட்டிற்கு இயைந்ததன்று . ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிறை மதியினை வைத்தே கணக்கிட வேண்டும் என்பது என் முடிபாகும்.

கேள்வி :தமிழ்த் தொடர் ஆண்டில் - நிகழ்வாண்டின் கால எல்லை என்ன?
பதில் : ஏழாம் மன்வந்திரத்தில் 8922965185 -ஆம் ஆண்டாகும்.

கேள்வி : இராசி மண்டலத்தில் முதல் மண்டலமாக நம் முன்னோர் கொண்டிருந்த மண்டலம் எது?
பதில் : சிம்மம் ஆகும்.

கேள்வி : தமிழ் மாதங்களின் பிறப்பு -பெயர் வைப்பு முறை பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில் : சிம்மத்திற்கு ஐந்தாம் மண்டலம் தனுசு; தனுசுவில் இடம் பெற்றிருக்கும் நட்சத்திரம் சித்திரை; முதல் மாதம் . கன்னியிலிருந்து ஐந்தாம் மண்டலம் மகரம்; மகரத்தில் இடம் பெற்றிருக்கும் நாண் மீன் விசாகம்; விசாகம் வைகாசி என திரிந்து வழங்குகிறது; கேரளத்தில் விசாகம் என வழங்கும் நிலை இன்றும் உள்ளது, நான் மேற்சுட்டிக் காட்டிய நெறிநின்று பார்ப்பின் தமிழ் மாத பிறப்பு முறை -பெயர் வைப்பு முறை இனிதே புலப்படும்.

கேள்வி ; கிழமைகள் தெரிவு செய்தமைக்கு நெறிமுறை யென்ன?
பதில் : சிம்மம் --- கடகம் : ஞாயிறு -- திங்கள் ; விருச்சிகம்--மேழம் : செவ்வாய்; கன்னி --மிதுனம் : புதன் ; தனுசு --மீனம் : குரு: இடபம் --துலாம் :வெள்ளி ( சுக்கிரன்) மகரம் --கும்பம் : சனி; இதுவே பெயர் தெரிவு செய்த முறையாகும். மேலே எடுத்துக் காட்டிய மண்டலங்கள் ஒவ்வொன்றும் கேந்திர முறையில் பகுக்கப் பட்டுள்ளதை காணலாம்.


கேள்வி : தெளிவான விளக்கம் வேண்டும்? .
பதில் :சிம்மம் --கடகம் என்னும் இரு மண்டலங்கள ஞாயிறு- திங்களாகும் ; சிம்மம் கடகத்திலிருந்து நான்காம் மண்டலம் விருச்சிகம்- மேழம் (செவ்வாய்) ஆகும் ;விருச்சிகம் --மேழத்திலிருந்து நான்காம் மண்டலம் கன்னி --மிதுனம் (புதன் ) ஆகும். கன்னி --மிதுனத்திலிருந்து நான் காம் மண்டலம் தனுசு --மீனம் (வியாழன்) ஆகும். தனுசு --மீனத்திலிருந்து நான்காம் மண்டலம் இடபம் --துலாம் (வெள்ளி) ஆகும். இடபம் --துலாத்திலிருந்து நான்காம் மண்டலம் மகரம் --கும்பம் (சனி) ஆகும் . இப்பகுப்பு முறையினை மேல் ஆறு- கீழ் ஆறு என மண்டலங்களை வரையறுத்து பார்ப்பின் தெளிவு கிட்டும்,

கேள்வி : நட்சத்திர கால அளவு குறித்து வேறுபாடு இருப்பின் விளக்கம் வேண்டும் ?
பதில் : வேறுபாடு உண்டு என்பதால் விளக்கமும் உண்டு. (1 ) கார்த்திகை ---1.625;(2) உரோகிணி-- 1.625; (3) மிருகசீரிடம்--2.00: (4) திருவாதிரை --1.5; (5)புனர் பூசம் --1.5; (6) பூசம் --1.5; (7) ஆயில்யம் --2.5; (8) மகம் --2.25 ; (9) பூரம் --1.5; (10) உத்திரம் --3.00 ; (11) அத்தம் --3-00; (12)கித்திரை --2.00; (13) சுவாதி --1.5 ; (14) விசாகம் --4.00 ; (15) அனுசம் --3.00; (16) கேட்டை --1.5; (17) மூலம் --1.5; (18) பூராடம் --2.75; (19) உத்திராடம் --2.75; ( 20) திருவோணம்-- 3.00; (21) அவிட்டம் --3.00; (22) சதயம் --2.5; (23) பூரட்டாதி--2.75; (24 ) உத்திரட்டாதி--2.75 (25) இரேவதி -- 1.75; (26) அசுவணி--2. 00; (27) பரணி 1.25


கேள்வி : கோள்களில் செலவு முறையில்-- தமிழர்களின் கோட்பாட்டின்படி மாற்றம் உண்டா?
பதில் : உண்டு .

கேள்வி : மேழத்திலிருந்து மீனம் ஈறாக வடகிழக்கு செலவுமுறை உள்ளது; இராகு கேதுக்கள் என்னும் துருவக் கோள்கள் எதிர்மறைச் செலவினை கொண்டுள்ளன. இவற்றில் மாற்றம் கொண்டுள்ளவை எது?
பதில் : கோள்களின் செலவு முறை தற்போதைய வழக்கில் வடகிழக்கு நெறியில் உள்ளன ; இந்நெறிமுறை தமிழர் கோட்பாட்டிற்கு உடன்பாடு இல்லாதது; உடன்பாடுகொண்ட கோட்பாடு தென்கிழக்கு செலவுமுறை ஆகும் என்பது என் கருத்தாகும்; (1) சிம்மம் : (3) கன்னி ; (5) துலை ; (7) நளி ; ( 9) தனுசு ; (11) மகரம் ; (2) கடகம் ; (4) மிதுனம்; (6) இடபம்; (8) மேழம்; (10) மீனம்: (12) கும்பம் ஆகிய இராசி மண்டலங்களில் சூரியன் முதல் சனி ஈறாக உள்ள எழு கோள்களும் மேற்சுட்டிக் காட்டிய எண் வரிசைப்படி முறையே வர வேண்டும்.


கேள்வி : தாங்கள் சுட்டிக் காட்டும் கோட்பாட்டிற்கு காரணம் என்ன?
பதில் : அறுபருவத்தை முன்னோர் கணக்கிட்டதன்மை தடம் மாறியதுதான்.


சிம்மம்--கடகம் கார்காலம் ; மிதுனம் --கன்னி கூதிர் காலம் ; துலாம்--இடபம் முன்பனிக் காலம் ; விருச்சிகம் --மேழம் பின்பனிக் காலம் ; தனுசு--மீனம் இள வேனிற் காலம் ; மகரம் --கும்பம் முது வேனிற் காலம். இவ் வரம்பு முறை புவியியல், அறிவியல், வானவியல் ஆகியனவற்றுக்கு இயைந்தது . மேலும் தமிழரின் கோட்பாட்டிற்கு உடன்பட்டது.

No comments:

Post a Comment