எதிரியை வீழ்த்த முதலில் அவனது சித்தாந்தத்தை வீழ்த்து!

Monday, June 15, 2009

மன்பதை ஏற்கா முடிபு

கேள்வி: தமிழக அரசு நடைமுறைக்கு கொண்டு வந்துள்ள தலைத் திங்கள் குறித்து தங்கள் கருத்து என்ன? தாங்கள் அரசின் திட்டத்தை ஏற்கிறீர்களா?

பதில்: மன்பதை ஏற்கா முடிபு என்பது தமிழ் ஆண்டு பிற்ப்பு வழக்கம்போல் உலகோர் கொண்டாடியதே இதற்குரிய சான்று ஆகும் .


கேள்வி : தமிழ்த் தொடர் ஆண்டு எளிதில் அறிய - கையாள தமிழக அரசு எடுத்த நடவடிக்கை குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில்: தவறான முடிபு என்பதை தக்க ஆதாரத்துடன் நீதிமன்றத்தில் எடுத்துரைத்து உண்மையினை உலகுக்கு உணர்த்த வாதாட உரிய தமிழ் அறிஞர்கள் முன்வராது இருப்பதுதான்.


கேள்வி : அறுபது ஆண்டு கள் பிறப்பு குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில்: இருபத்தேழு நட்சத்திரங்கள் சுழற்சி முறையினை; வளர்பிறை - தேய்பிறை சுழற்சி முறையினை ஏற்போர் அறுபது ஆண்டுகளின் இருபத்தேழு பெயர்களை ஏற்பதில் தவறில்லை ; ஆனால் அதன் உண்மையினை உணராமல் இருப்பது தமிழ் மக்களின் மடமை என கருதுகிறேன். அம்மடமைத் தன்மையினை போக்க ஆக்கப் பணிகள் தொடரும் நிலை உள்ளது.

கேள்வி: அறுபது ஆண்டுகள் குறித்து வழங்கும் புராணக் கதையினைப் பற்றி உங்கள் கருத்து எத்தன்மையானது ?

பதில் : அறிவியல் சார்ந்த கருத்தை உட்பொருளாக கொண்டு உரைத்திருக்கும் சிறப்பு போற்றத்தக்க தாகும்.


கேள்வி : சமனுடைமை-பொதுவுடைமை கோட்பாட்டினைக் கொண்ட உருசிய - சீனா நாடுகள் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கைக்கு பல உதவிகளை அளித்துக் கொண்டிருப்பதால் அவ்விரு நாடுகள் மறந்த கோட்பாடு என்ன?

பதில்:: தனியுடைமை கோட்பாட்டை ஒழிப்பதே தம் கடமை யென ஒரு காலகட்டத்தில் கொண்டிருந்தாலும் இப்போது அக்கோட்பாடு சீர்கேடுற்று - நாடுவாரற்று நடைபிணமாகிக் கொண்டிருக்கும் நிலையினை கண்டிட அந்நாடுகள் வழி வகுத்துக் கொண்டிருக்கின்றன. மேலும் தனியுடைமை கோட்பாட்டிற்கு மூல வேராய் உள்ள ஆதிக்கக் கோட்பாட்டை அழித்திட எண்ணாது உள்ளூர உதவியினை அளித்து உயிரூட்டம் தந்து பாதுகாப்பதை அவர்கள் உணராது மறந்து இயங்குவதாகும்.


கேள்வி : நம் நாட்டிற்கு தே வையான கோட்பாடு தனியுடைமையா? பொதுவுடைமையா?
பதில்: பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே மேலை நாட்டு அறிஞன் சுட்டிக் காட்டியபடி நம் நாட்டிற்கு தேவையான கோட்பாடு அன்புடைமை கோட்பாடு ஆகும். இக்கோட்பாடு நம் நாட்டிற்கு மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்துக்கும் வேண்டப்படும் கோட்பாடு ஆகும்.

கேள்வி : அன்புடைமை கோட்பாட்டிற்கு அடித்தளம் என்ன?
பதில் : இந்து சமயம் வலியுறுத்தும் ஆணவம் , கன்மம், மாயை ஆகியவற்றை அழிக்கும் நெறிமுறைகளை தன்னுள் கொண்டதுதான் அன்புடைமையின் அடித்தளம் ஆகும் .

கேள்வி : புராண இதிகாச நாயகர்கள் கற்பனை படைப்பு என்னும் கொள்கையினை யுடைய தாங்கள் இந்து சமய கோட்பாட்டை ஆதரிப்பது ஏன்?
பதில் : கருத்தின் சாரத்தை ஏற்கும் நான் கருத்தின் நாயகர்களாக வலம் வரும் கற்பனைப் படைப்பைமூலவேராக உள்ளதை உணர்ந்ததுதான்.


கேள்வி : பொதுவுடைமை க் கோட்பாடே நடைபிணமாகிக் கொண்டிருக்கும் இக்காலக் கட்டத்தில் அன்புடைமை கோட்பாடு தழைக்கும் என்று கருதுவது மடத்தன்மை என பிறர்கூறுவது பற்றி தங்கள் கருத்து ?

பதில்: மாணிக்கக் கல்லை கூழாங்கல் என கூறுவோர் எத்தன்மையானவன் என்று நாம் எண்ணுகிறோமோ அதுபோன்றுதான் பிறர் கூறும் கருத்துக்கு நான் அளிக்கும் விளக்கம் ஆகும்.


கேள்வி : இமயம் முதல் குமரி வரை நமது நாடு என்று இற்றையத் தமிழர்கள் போராட வேண்டும் கருதுகிறீர்களா? திருத்தணி முதல் குமரி வரை பெற்றது போதும் என்று அமைதியுடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா?
பதில் : திருத்தணி முதல் குமரி வரை பெற்றது போதும் என்று முடங்கிக் கிடக்க வேண்டுமென்று நான் எண்ண வில்லை ;அதே நேரம் இமயம் முதல் குமரி வரை எங்களது நாடு என்று போர்க்குரல் எழுப்ப வேண்டும் , போராட வேண்டும் என்று கூறவில்லை ; மாறாக இமயம் குமரி வரை இழந்த உரிமையினை -தலைமையினை -பெருமையினை மீட்டிட நாம் - நம் மக்கள் ஆற்ற வேண்டிய பணிகளை அறிந்து ஆற்ற வேண்டும் என்பதுதான் என் விருப்பம்.

கேள்வி : தனி நாடு கேட்டு போராடும் விடுதலைப் புலிகள் தமிழ் ஈழம் மலர்வதை விரும்புவார்களா? உடன்பட்டு செயல்படுவார்களா?

பதில் : தங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டுமென்ற கடமையுள்ள காரணத்தால் அதற்குரிய காலத்தை எதிர் பார்த்திருப்பவர்களுக்கு உரிய காலமும் சூழலும் கனிந்து வரும்பொழுது அதனை வீணாக்கும் திறன் விடுதலைப் புலிகள் பெற்றவர்கள் அல்ல; எனவே விரும்பி செயல்படும் காலமும் நேரமும் பொருந்தி வரும் நாள் வெகு தொலைவில் இல்லை.


கேள்வி : ஈழத் தமிழர்கள் உடன்பாடு எத்தன்மையில் இருக்கும் ?

பதில் : வரிசையில் நின்று உணவு பொட்டலத்தை பெற்று அரை வயிறு கழுவும் நிலை உள்ளவனுக்கு தலைவாழை இலை விரித்து பால் பாயாசத்துடன் பதினெட்டுவகை காய்கறி கூட்டுடன் விருந்தளிக்கும் தன்மை கொண்டதாக இருக்கும் .


கேள்வி : ஈழத் தமிழம் இந்திய -இலங்கை இரு நாடுகளுக்கிடையே ஒரு நாட்டின் தலைமையினை ஏற்பின் ஒவ்வொரு நாட்டின் அணுகுமுறை எத்தன்மையில் இருக்கும் ?
பதில் : மாற்றாந்தாய் மனப்பான்மை இலங்கை அரசிடமும் ; உடன்பிறப்புத் தாயின் உணர்வினை இந்திய அரசிடமும் காணத்தக்க நிலையில் இருக்கும் .

கேள்வி : தமிழ் ஈழம் மலர்வதை இலங்கை அரசு விரும்பும் தன்மை இருக்குமா?
பதில் : தான் துய்த்து வந்த இன்பத்தை அத்துணை எளிதில் துறந்திட மாபெரும் ஈகை நாடா இலங்கை அரசு; சாக்கடை நீரில் சந்தனத்தின் மணத்தினை எதிர்பார்ப்பது போன்றது உங்களுடைய கேள்வியின் தன்மை. கடந்த கால வரலாற்றுச் சுவடுகள் பல உள்ளன நான் கூறிய கூற்றுக்கு ஆதாரமாக .


கேள்வி : தமிழ் ஈழம் மலர்வதை தடுத்திட இலங்கை அரசின் அணுகுமுறை வெற்றிபெறுமா? வீழ்ச்சி யுறுமா?

பதில் : அரை நூற்றாண்டு கால முயற்சி இலங்கை அரசுக்கு பயன் -பலன் அளித்திருக்கலாம் , ஆனால் , இனி எடுக்கும் முயற்சி வீணான தாகும். ஏன் ? எனின் அடுத்த பொதுத் தேர்தலுக்குள் தமிழ் ஈழம் மலர்வதை யாரும் தடுக்க முடியாது.


கேள்வி : தாங்கள் இத்துணை உறுதியுடன் கூறுவதற்கு காரணம் என்ன?
பதில் : "சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான் ஊக்கம் அழித்து விடும்" என்ற வள்ளுவனின் வாய் மொழி யின் உண்மையினை உணர்ந்ததுதான்.


கேள்வி: தமிழ் ஈழம் மலர்ந்திட யார் யார் பாடுபட வேண்டும் என்று கருதுகிறீர்கள் ?
பதில் : தமிழ் ஈழம் மலர்ந்திட நாட்டம் கொண்ட உண்மை உணர்வாளிகள் மற்றும் உரிய தலைவர்கள் ஆகும் .

கேள்வி : யாரும் கூறா கருத்தினை தாங்கள் கூறுவதற்கு காரணம் யார் ?
பதில் : இலங்கை அரசின் -உதவிய நாடுகளின் அணுகு முறையே இதற்கு காரணமாகும் .


கேள்வி : புராணங்கள் சுட்டிக் காட்டும் அரக்கர் இனம் யார் என்று கருதுகிறீர்கள்?
பதில்: பண்டு காடுறை வாழ்க்கையினை மேற்கொண்டிருந்த காட்டு வாசிகள் ; இன்று மனித நேயமற்ற மாந்தர்கள் . ஆகும்.

கேள்வி : தேவர்கள் என்று கூறத்தக்கவர் யார்?
பதில்: திருந்திய நகர வாழ்க்கையினை மேற்கொண்டு நன்னெறியில் நடைபோட்டவர்கள் அன்று ; குறை காணமுடியா நிலையில் தன் கடமையினை உணர்ந்து செவ்வனே செயல் படும் நல்லோர் சிலர் இன்று .

கேள்வி : " சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் " என்று அன்று பாட்டிசைத்த பாரதியின் கனவு நனவாகிறது என்பதை ஏற்கிறீர்களா?
பதில் : ஏற்கும் சூழல் உருவாகி வருகிறது .

கேள் வி : இந்திய அரசின் அணுகுமுறைதான் அச்சூழல் என்று கருதுகிறீர்களா?
பதில் : அன்று பாரதி சுட்டிக் காட்டிய பாலம் உதவி அடிப்படை கொண்டது அல்ல; உறவு அடிப்படை கொண்டது ஆகும். உறவு அடிப்படையில் அமைய விருக்கும் தமிழ் ஈழ இணையப் பாலம் ஆகும். அவ்விணையப் பாலம் ஈழத் தமிழம் இந்தகம் என்னும் இந்திய நாட்டின் ஒரு மாநிலமாக - ஈழத் தமிழர் இந்தக அரசில் பங்கு பெரும் உரிமையுடையோராக - ஈழத்தமிழம் இந்தக நாட்டின் காப்பரணாக வருவாய்த் தளமாக அமையப் போவது உண்மை. இவ்வுண்மையினை இருநில மக்களும் வெகு விரைவில் உணர்வர் . உணரும் நாள் அருகில் உள்ளது. மலரும் அந்நாள் இருநிலத் தமிழர் மட்டுமின்றி உலகத் தமிழர் அனைவரும் மகிழும் பொன்னாள் ஆகும்.

கேள்வி : இந்தி ய நாட்டின் ஒற்றுமை - ஒருமைப் பாட்டிற்கு அடித்தளம் அரசியல் அமைப்பா? அரசியல் கட்சிகளா ?
பதில் : இரண்டும் அல்ல; இந்து சமயம் ஒன்றுதான்; இந்து சமயம் இமயம் முதல் குமரிவரை வாழும் பெரும்பான்மை மக்களை பிணைக்கவல்ல பாசக் கயிறு என்று கூறலாம் .

கேள்வி : பலமொழி, பல இனம் உள்ள நம் நாட்டில் தாங்கள் கூறும் கூற்றை ஏற்பின் பலன்-பயன் எய்தும் மக்கள் யாராக இருப்பர்?
பதில்: பலன் -பயன் எய்துவோர் ஒரு பகுதியினர் மட்டுமல்ல; அனைவரும் ஆவர். ஆனால் பெருமையினை எய்துவது தமிழினம் மட்டுமே ஆகும் .


கேள்வி : தமிழ் இனம் மட்டும் பெருமை பெறக் காரணம் என்ன?

பதில் : தமிழரின் முன்னோர் வகுத்த நெறிமுறை; வளர்த்த மொழி ; புரந்து நின்ற சமயம் முதலியன வாகும்.


கேள்வி : பெருமை பெற வேண்டிய தமிழினம் உரிமை இழந்து வாழ வேண்டிய நிலைக்கு காரணம் ?
பதில் : தன் உரிமையினை, தலைமையினை, பெருமையினை மறந்து அடுத்தவர் தாள் பணிந்து கிடக்கும் நிலையினை எண்ணிப் பார்க்காது இயங்கிக் கொண்டிருப்பதை - மடமை என்பதை உணராததுதான்.


கேள்வி : ஒரு மொழி யின் வளர்ச்சி எதனைக் காட்டுகிறது?

பதில் : பேசும் மக்களின் ஏற்றத்தை சுட்டிக் காட்டுகிறது.

கேள்வி :தமிழின் வள ர்ச்சி தற்பொழுது எந்நிலையில் உள்ளது ?

பதில் : தந்தை பெரியார் வலியுறுத்திய எழுத்து சீர்திருத்தம் பீடுந டை போடா நிலையில் முடங்கிக் கிடப்பது ஒன்றே போதும் தங்கள் கேள்விக் கு உரிய பதில் .

கேள்வி : பெரியார் வலியுறுத்திய எழுத்து சீர்திருத்தம் நடைபோடா நிலைக்கு காரணம் யார் ?
பதில் ; 'தமிழ் ஓலை' என்னு ம் தனிச் சுற்றிதழை - முதல் இதழை தாங்கள் ஒருமுறை கண்ணோட்டம் செலுத்திடின் உண்மைநிலை புரியும் யார் என்று.

No comments:

Post a Comment