எதிரியை வீழ்த்த முதலில் அவனது சித்தாந்தத்தை வீழ்த்து!

Tuesday, June 16, 2009

இந்திய நாட்டின் ஆட்சி மொழி

கேள்வி ; தந்தை பெரியார் வலியுறுத்திய எழுத்து சீர்திருத்தத்தை நடைமுறைப் படுத்தா த தன்மையினால் தமிழின் வளர்ச்சி எத்தன்மையில் உள்ளதென கருதுகிறீர்கள்?

பதில்: மண்ணில் முளைவிடா விதைபோல் உள்ளது.

கேள்வி : செம்மொழி எனும் தகுதியினை பெற்றிருப்பது -நண்ணில அரசு இசைவாணை வழங்கி யிருப்பது மண்ணில் முளைவிடா விதை என்று கருதுகிறீர்களா?

பதில் : பெயர் அளவில் ஏற்றுக் கொள்ளப் பட்டாலும் செய ல் அளவில் பயன் - பலன் எதுவுமில்லை என்பதை ஆராயின் உண்மை புலப்படும்.

கேள்வி: செம்மொழி மையத்துக்கு அமர்த்தம் செய்யப்பட்டுள்ள ஐம்பெருங்குழு - எண்பேராயத்தின் பேராளர்கள் பற்றி தங்கள் கருத்து என்ன?

பதில் : சரக்கு சிறப்பாக இருக்க வேண்டும்; பயன் உண்டு. சரக்கு சிறப்பாக இல்லாது சரக்கு வழங்குவோர் மட்டும் எடுப்பாக இருந்து பயன் இல்லை.


கேள்வி : இந்திய நாட்டின் ஆட்சி மொழி தகுதி எம்மொழிக்கு இருக்கிறது?

பதில் : விருப்பு -வெறுப்புக்கு இடன் இல்லாது மொழிநூல் வல்லார்களின் கருத்தை ஆராயின் தமிழ் மொழி மட்டுமே அத்தகுதிக்கு உரியதாகும்.

கேள்வி : பிற மொழிகள் பேசுவோர் தமிழ் மொழியினை ஆட்சி மொழியாக ஒப்புதல் அளிப்பார்களா?

பதில் : பலமொழி பேசும் மக்களிடையே ஒரு மொழியினை ஆட்சி மொழி ஆக்குதற்கு ஒரு வரம்பு இருப்பின் ஆட்சி மொழி தகுதியினை தமிழ் தட்டிப் பறிக்கும்; மேலும் உலக ஆட்சி மொழியாக இலங்க த் தக்க தகுதியும் தமிழுக்கு உண்டு; உலக மொழிகள் பலவற்றிலும் தமிழ்ச் சொற்கள் வழங்குவதுபோல் பிறமொழிச் சொற்கள் உலக மொழிகள் பலவற்றில் வழங்கும் நிலையினைக் காணமுடியாது. மேலும் தாங்கள் கேட்ட கேள்வி க்கு பதிலை அளித்தேனே தவிர தமிழ் மொழிக்கு ஆட்சிமொழி தகுதியினை அளிக்க வேண்டுமென்று வலியுறுத்த வில்லை என்பதை தாங்கள் நினைவிற் கொள்ள வேண்டும். ஆட்சி மொழிக்குரிய தகுதி தமிழைத் தேடிவரும் காலம் ஒரு நாள் மலரும். அந்நாள் எந்நாள் என்பதை காலம் அளிக்க வேண்டிய பதில்.


கேள்வி : நமக்கு ஓர் ஆண்டு என்பது பிரமனுக்கு ஒரு நாள் என விளம்பும் நிலை குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில் : 360 பாகைகளை கொண்ட வான வெளியினை சுற்றி வர சூரியன் எடுத்துக் கொள்ளும் கால அளவு 365.25 நாட்கள்; சந்திரன் எடுத்துக் கொள்ளும் கால அளவு 30 நாட்கள்; செவ்வாய் மண்டலம் எடுத்துக் கொள்ளும் கால அளவு 18 மாதங்கள் ; புதன் மற்றும் சுக்கிர மண்டலங்கள் எடுத்துக் கொள்ளும் கால அளவு சூரியன் எடுத்துக் கொள்ளும் கால அளவாகும். வியாழன் எடுத்துக் கொள்ளும் கால அளவு 12 ஆண்டுகள்; சனி மண்டலம் எடுத்துக் கொள்ளும் கால அளவு 30 ஆண்டுகள்; இராகு, கேது துருவக் கோள்கள் எடுத்துக் கொள்ளும் கால அளவு 18 ஆண்டுகள் ஆகும். ஆனால் , புவி மண்டலம் எடூத்துக் கொள்ளும் கால அளவு 60 நாழிகை-ஒரு நாள்; இதனையே பிரமனுக்கு ஒரு நாள் என விளம்பும் நிலை வாழ்ந்து வருகிறது .



கேள்வி.: பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என வழங்கும் பழமொழி யின் உட்பொருள் என்ன?

பதில்: பழந்தமிழர் கிழமை (வாரம்) ஒன்றுக்கு அறுநாட்களையே தெரிவு செய்து வழங்கி வந்தனர். அந்நெறிமுறையின்படி மாதம் ஒன்றுக்கு ஐந்து கிழமை
கள் இடம் பெறும் ; ஐந்து கிழமைகளை நிரல் படுத்துங்காலை மூன்றாம் கிழமையில் உள்ள புதன் நிறையுவா வரும் நாளில் மட்டுமே வரும். அந்நிறையுவா நாளில் புதனைத் தவிர்த்து பிற கோள்களின் பெயர்கள் வந்திடா அதன் காரணமாகவே பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என விளம்பும் வழக்கம் இருந்து வருகிறது .


கேள்வி : கிழமைக்கு அறு நாட்களை கொள்வதற்கு - கொண்டதற்கு ஆதாரம் என்ன?
பதில்: பன்னிரு இராசி மண்டலங்களில் சூரியர்- சந்திரர் இருவருக்கும் ஒவ்வொரு மண்டலமும் ஏனைய ஐந்து கோள்களுக்கு இரண்டு , இரண்டு மண்டலமாக பகுக்கப் பட்டுள்ள தன்மையே உரிய சான்றாகும்.

No comments:

Post a Comment