எதிரியை வீழ்த்த முதலில் அவனது சித்தாந்தத்தை வீழ்த்து!

Saturday, June 6, 2009

06062009

புலவர் அரசு பதில்கள் :

கேள்வி : இற்றைக்கு தமிழ் நாட்டின் வடஎல்லை திருத்தணி பகுதியும் தென் எல்லை குமரியும் உள்ளன போன்று பண்டு தமிழ் நாட்டின் வட தென் எல்லைகள் குறித்து தாங்கள் அளிக்கும் விளக்கம் என்ன ?

பதில் : இற்றைக்கு தமிழ் நாட்டின் நாற்புற எல்லைகள் மொழி வழி மாநிலங்கள் என்று பிரித்தகாலை தாங்கள் சுட்டிக்காட்டிய எல்லைகள் வரம்பாக இருப்பனபோன்று பண்டு வட தென் எல்லைகள் முறையே வேங்கடம் மற்றும் குமரியினை எல்லைகளாக கொண்டிருந்தன ; கிழக்கு மேற்கு எல்லைகளாக கடல்கள் இருந்தன .

கேள்வி : வடபால் வேங்கடம் என்னும் எல்லை இருந்ததாக ஏற்றுக்கொள்வது போன்று வேங்கடம் எனும் பெயர்ச்சொல் திருப்பதி- ஏழு மலையினைக் குறித்து வழங்கியது என்பதை ஏற்கிறீர்களா ?

பதில் : மறுக்கிறேன் .

கேள்வி : அதற்குரிய விளக்கம் என்ன?
பதில் : "வடா அது பனிபடு நெடுவரை வடக்கும்'' என்னும் புற நானூற்றின் ஆறாம் பாடலும் பதினேழாம் பாடலாக உள்ள "தென்குமரி வ்டபெருங்கல் " என்ற விடத்து "வ்டபெருங்கல் "என்ற தொகைச்சொல்லும் "வடதிசை கங்கையும் இமயமும் கொண்டு தென்றிசை யாண்ட தென்னவன் வாழி " என்னும் சிலப்பதிகார அடிகளும் வேங்கடம் என்னும் பெயர்ச்சொல் திருப்பதி -ஏழு மலையினைக் குறித்து வழங்கியது என்பதை மறுக்கின்றது . எனவே , வேங்கடம் எனும் பெயர்ச்சொல் இமயத்தைக் குறித்து வழங்கியது என்பதை உணர இடம் உள்ளது.

கேள்வி :வேங்கடாசலம், வேங்கடேஷ்வரன், வேங்கடேஷ் எனும் பெயர்கள் திருமாலைச் சுட்டி வழங்கும் நிலை உள்ள பொழுது வேங்கடம் எனும் பெயர் இமயத்தை சார்ந்து வழங்குகிறது என தாங்கள் அளிக்கும் கருத்துக்கு ஆதாரம் என்ன?
பதில்: வெண்கை இடம் கொண்டான் வெங்கிடத்தான் என்னும் பொருளில் வழங்கத் தலைப்பட்ட தொகைச் சொல் கால ஓட்டத்தில் வெங்கிடத்தான் - வேங்கிடத்தான் - வேங்கடத்தான் என உலக வழக்கில் மருவி வழங்குகின்றது. வெண்கை என்பது வெண்கைலை என்னும் தொகைச் சொல்லின்கண் உள்ள ஈற்றொலி கெட்டு வெண்+கை(லை)= வெண்கை என வழங்கும் தொகைச் சொல்லிற்கு உட்பொருள் வெள்ளீய பனிமலை என்பதாகும்.

கேள்வி: தென்பால் எல்லை குமரி என வரும் பெயர்ச் சொல் ஆகுபெயரா? காரணப்பெயரா?
பதில்: காரணப்பெயர்.

கேள்வி: : காரணப்பெயர் தோற்றத்திற்கு மூலமாய் அமைந்தது கடலா? ஆறா? மலையா ? விளக்கம் வேண்டும்.

பதில் : குமரி என்னும் காரணப்பெயர் தொடக்கத்தில் நட்டையும் அதன்பின் கடல், மலை, மற்றும் ஆறினைக் குறித்து பொருல் திரிந்து வழஙுகின்றது என்பதே யான் கொண்ட முடிபாகும்.



கேள்வி : குமரி என்னும் காரனப்பெயருக்கு சிலர் அளவில் மலையினையும் சிலர் அளவில் ஆறினையும் பொருல் கொள்ளும் நிலை உள்ளபொழுது தஙள் மட்டும் நாடு என பொருள் கொள்வதற்கு உரிய சான்று என்ன?

பதில்: "பஃருளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்து குமரிக் கொடுங் கடல் கொள்ள "என வரும் அடிகளீல் இடம் பெற்றுள்ள குமரிகோடுங் என்னும் தொகைச் சொல்லிற்கு மலை என பொருள் கொண்டோர் உண்டு. "தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்"என வரும் புறனானூற்று 6-ம் பாடலுக்கு ஆறு என உரை கண்டோரும் உண்டு. இதன் மூலம் குமரி என்னும் பெயர்ச் சொல் ஆறா? மலையா? என ஒரு முடிபுக்கு வர தடை இருந்து வருகின்றது. அதே நேரம் நான் கூறும் நாடு என்னும் பொருள் கொள்ள தடையில்லை. ஏன்? எனின் "குமரியம் பெருந்துறை யயிரை மாந்தி " என என வரும் 67-ம் புறப்பாடல் உறுதுணையாக உள்ளது. "குமரியம் பெருந்துறை" எனின் நடுவரை நாட்டின் நீர் நிலையினை

கேள்வி: குமரியம் பெருந்துறை யயிரை மாந்தி என்ற வரிகளுக்கு தாங்கள் தரும் விளக்கம் கொஅடு என்னும் சொல்லிற்கு மலை என்னும் பொருள் உள்ளதால் குமரி என்னும் நிலைமொழியுடன் கோடுஎன்னும் வருமொழி இணைந்து குமரிக் கோடு என வழங்கும் பொழுது நாடு என பொருள் கொள்ள தடை ஏற்படுவதை ஏற்கிறீர்களா?


பதில்: ஏற்பதற்கு இல்லை. ஏன் எனின் குமரி என்னும் சொல்லிற்கு நடு என்னும் பொருளும் கோடு என்னும் சொல்லிற்கு வரை என்னும் பொருளையும் கொள்ளின் ஒருசேர பொருந்தும்.

கேள்வி: நடுவரை,குமரிக்கோடு என்னும் தொகைச் சொற்கள் தோன்றக்காரணமாய் இருந்தது யாது?

பஃருளியாற்றுடன் பன்மலை யடுக்கத்து குமரிக் கோடுங்கொடுங்கடல் கொள்ள எனவரும் வரிகளில் இடம் பெற்றுள்ள "பன்மலை யடுக்கத்து " என்னும் தொகைச் சொல்லிற்கு தாங்கள் கொள்ளும் பொருள் என்ன ?

No comments:

Post a Comment