கேள்வி: தாங்கள் எடுத்துரைக்கும் நாடுகள் முழுமையாக கடல் கொண்டிருக்கக்கூடும் என்று கருதுகிறீர்களா? அல்லது அதன் எஞ்சிய பகுதி உள்ளன சில என்று கருதுகிறீர்களா?
பதில் : கடல் கோளுக்கு இரையானது போக எஞ்சிய பகுதிகள் சில உள்ளன என்று கூறலாம்.
கேள்வி: நீங்கள் கூறும் ஊர்கள் எங்கு உள்ளன ?
பதில் : தமிழ் ஈழத்தில்
கேள்வி : அதற்குரிய சான்றுகள் என்ன?
பதில் : எடுத்துக்காட்டிற்கு யாழ்ப்பாணத்தைக் கொள்ளலாம். ஏழ்பனை நாடு என்னும் தொகைச் சொல்லே இன்று யாழ்ப்பாணம் என்று மருவி வ்ழங்குகின்றது என்பது என் முடிபு.
கேள்வி : ஈழம் என்னும் பெயர்ச் சொல் தோன்றக் காரணம் என்ன?
பதில் : ஏழ் நாடு என்னும் தொகைச் சொல்லே ஈழம் என்னும் பெயர்ச் சொல் தோன்ற அடித்தளமாக இருந்திருக்கக் கூடும்.
கேள்வி: இற்றைய இலங்கை அற்றைக்கு நடுவரை நாட்டில் இருந்ததாக கருதுகிறீர்களா? இல்லை என்று கருதுகிறீர்களா?
பதில் : நடுவரை நாட்டில் இலங்கை எனும் பகுதி இருந்ததை ஏற்கிறேன்; ஆனால் நான் ஏற்கும் இலங்கை இன்றில்லை. ஏன் எனின் சிவதருமோத்தரம் என்னும் நூலிற்கு உரை கண்டவர் மேருமலையின் அடிவாரத்தில் இருந்த இலங்கை கடல் கோளால் மறைவுற்றது என குறிப்பிட்டுள்ளார் என்பதனால் ஆகும்.
கேள்வி : முன்னிருந்த இலங்கை அழிவுற்றிருப்பின் இதுபோழ்துள்ள இலங்கை பிறக்கக் காரணம் என்ன?
பதில் : முன்பிருந்த இலங்கையில் வதிந்த மக்கள் கடல் கோளால் புலம் பெயர்ந்து தற்போதைய இலங்கையில் வதிந்த காரணத்தால் இலங்கை எனும் ஆகுபெயர் தோன்றக்காரணமாய் இருந்திருக்கக் கூடும்.
No comments:
Post a Comment